திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.
இதன் முதலாவது அலகை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், நிறுவுவதற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா ஆகியோரின் பங்கேற்புடன் தொடங்கி வைக்கப்பட்டன.
நிர்மாண பணிகள்
இதன்போது அமைச்சர் உரையாற்றுகையில், ஜப்பான் நாட்டு மக்களின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாணத்துக்கான 8 மாடி கட்டடங்களை கொண்ட பிரதான இருதய சத்திர சிகிச்சை பிரிவு திருகோணமலை அமைய உள்ளதாகவும், இன்னும் ஆறு மாதங்களில், அதற்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அரசாங்கம் நாட்டில் ஐந்து வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்த திட்டங்கள் தீட்டிருப்பதாகவும், அதில் திருகோணமலை வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோன்று, நாட்டில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்பட உள்ளன.
அதில் இன்று, திருகோணமலை வைத்தியசாலையிலே முதலாவதாக ஆரம்பித்துள்ளோம். இதுவும் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும், அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே என்றும் தெரிவித்தார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri