திருகோணமலையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த முன்னாயத்த ஆலோசனை குழுக்கூட்டம் (Photos)
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெள்ள அனர்த்த முன்னாயத்த மாவட்ட குழுக்கூட்டமானது இன்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வருடாந்தம் நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை இடம்பெறும் வட கிழக்கு பருவமழை காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
பருவமழை காலநிலை
இந்நிலையில் கூடுதலாக, தற்போது நிலவும் இரண்டாவது பருவமழை காலநிலையானது ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயத்தை அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில், மழைக்கால அனர்த்தங்களினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு முன்னோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பிரதேச ரீதியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் அவர்களினால் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அரச திணைக்கள பிரதானிகள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள், முப்படையினர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
