பாலுக்குள் விழுந்த பல்லி:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
பல்லி விழுந்த பாலை குடித்ததனால் மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியிலேயே நேற்று(22.12.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலில் பல்லி விழுந்த சம்பவம்
இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 01 வயது 04 , 05 மற்றும் 09 வயது,63 வயது உடையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
பாட்டி, பாலை காய்ச்சி சிறுவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் அருந்திய போது மயக்க நிலை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பால் காய்ச்சிய சட்டியை பார்த்தபோது அதில் பல்லி விழுந்து கிடந்ததாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த ஐவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
