மீண்டும் போராட்டத்தை தொடரப் போகும் முத்து நகர் விவசாயிகள்
தீர்வினை தராவிட்டால் மீண்டும் தமது போராட்டத்தை தொடரப் போவதாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமது விவசாய நிலங்களை தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சுமார் 70 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் திட்வா புயல் காரணமாக கைவிட்டனர்.
மீண்டும் போராட்டம்
இதன் பின்னர் நேற்றையதினம் (18)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரம் இருந்தது இதனால் 352 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.
முத்து நகர் விவசாய 800 ஏக்கர் காணிகளை தாரை வார்த்துள்ளனர்.
தகவல்கள் திரட்டப்பட்டு மாற்று காணி தருவதாக கூறி நான்கு பிரதேச செயலகப் பிரிவில் தகவல்களை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri