திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03.07.2026) பிரதேச செயலாளர் என்.மதிவண்ணணின் ஒருங்கமைப்பில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரொசான் அக்மீமன தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் மற்றும் திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா(சுப்ரா), திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வி.சுரேஷ் ,திணைக்கள தலைவர்கள்,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மக்கேய்சர் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பிலும் இதனை மீள கட்டுமாணப்பணியை முன்னெடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலும் எதிர்கால மாநகர அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.