திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
திருகோணமலை (Trincomalee) கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (12) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூபா நகர் கிண்ணியா 03ஐ சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரிடமிருந்து11கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த பெண் முன்னரும் போதை பொருளுடன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri