டித்வா புயல் தாக்கம் : திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம் வெளியானது
புதிய இணைப்பு
சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22883 குடும்பங்களை சேர்ந்த 74449 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து இன்று (02) காலை 07.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17772 குடும்பங்களை சேர்ந்த 59071 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
75 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 6615 குடும்பங்களை சேர்ந்த 19260 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 நேற்று (01) மாலை 06.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 620 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17612 குடும்பங்களை சேர்ந்த 58440 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.73 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 4836 குடும்பங்களை சேர்ந்த 14480 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அனர்த்த விபரம்
திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 521 குடும்பங்களை சேர்ந்த 1849 நபர்களும், தம்பலகாமம் 450 குடும்பங்களை சேர்ந்த 1421 நபர்களும்,மொறவெவ 135 குடும்பங்களை சேர்ந்த 420 நபர்களும்,சேருவில 805 குடும்பங்களை சேர்ந்த 2287 நபர்களும், வெருகல் 1880 குடும்பங்களை சேர்ந்த 5607 நபர்களும்,மூதூர் 6941 குடும்பங்களை சேர்ந்த 22378 நபர்களும்,கிண்ணியா 5007 குடும்பங்களை சேர்ந்த 16446 நபர்களும்,கோமரங்கடவல 304 குடும்பங்களை சேர்ந்த 942 நபர்களும் , பதவிஸ்ரீபுர 533 குடும்பங்களை சேர்ந்த 1802 நபர்களும், குச்சவெளி 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 நபர்களும், கந்தளாய் 286 குடும்பங்களை சேர்ந்த 981 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதுஇ
அத்துடன் மீட்பு நடவடிக்கைகளில் முப்படையினர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் வான்வழி மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையினை படையினர் வழங்கி வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்கள்
மகாவலி கங்கை பெருக்கெடுப்பு மற்றும் மாவிலாறு உடைப்பு காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்தினால் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ விசேட கூட்டம் (01) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ஆபத்தான பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தேவையான இடமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri