திருமலை மாவட்ட வெருகல் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வு
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட மற்றும் இவ்வருடம் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக பார்வையிடுவதற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியினால் கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கள விஜயமானது, நேற்று (06.08.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகளின் அறிக்கை
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அபிவிருத்தி பணிகளின் அறிக்கை தொடர்பான பூரண விளக்கம் அளிக்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபரினால் அபிவிருத்தி பணிகள் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், வெருகல் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், குறித்த துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |