தமிழரசுக் கட்சியில் யார் மீது யார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது
தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பார்கள்.
அதனை கட்சி கூடி பேசி முடிவை அறிவிக்கும். அது கட்சியின் முடிவுஸ. அதில் உடன்பாடு இல்லாத தனிநபர்கள் சில முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகிறது.
அவ்வாறே இந்த தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது.
அது நிலையாக இருக்கும். கட்சி ரீதியில் சுமந்திரன் மீதும் தவறு இருக்கும். ஏனையவர்கள் மீதும் தவறு இருக்கும் அது பேசிக்கொள்ளலாம்.
கட்சி நிலையாக இருக்கும். கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |