கிழக்கு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்

Parliament of Sri Lanka Trincomalee Imran Maharoof Sri Lanka Fisherman
By Mubarak Sep 24, 2023 10:50 AM GMT
Report

கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து எடுத்த ஒருதலைபட்சமான முடிவு இம் மாவட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் உடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முருகல்நிலை தொடர்பாகவும், அது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)

யாழில் திலீபனின் நினைவிடத்தில் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அஞ்சலி(Video)

கிழக்கு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Trincomalee Distric Member Of Parliament Imarn

 இரண்டு வகையான சுருக்கு வலை

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

சுருக்குவலையைப் பொறுத்தவரை அனுமதிக்க பட்ட சுருக்கு வலை, அனுமதிக்கப்படாத சுருக்கு வலை என இரண்டு வகையான சுருக்கு வலைகள் உள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்ளது.

கிழக்கு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Trincomalee Distric Member Of Parliament Imarn

இதில் சட்டரீதியாக அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலை மூலம் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை, வெருகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

எனினும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலைக்கும் அனுமதி பத்திரம் வழங்க முடியாத சுருக்கு வலைக்கும் வித்தியாசம் அறியாமல் ஆளுநர் தற்போது சுருக்கு வலை என்பது சட்டவிரோதமான ஒன்று என்ற நோக்கில் எடுத்த ஒரு தலைபட்ச முடிவு திருகோணமலை மாவட்ட சிறுபான்மை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை இல்லாமலாக்கும் முயற்சியாக உள்ளது.

மீனவக் குழுக்கள்

இங்கு இரண்டு மீனவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே முருகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு குழுக்களையும் அழைத்து இரு பக்க நியாயங்களையும் கேட்ட பின்பே தீர்மானத்திற்கு வர வேண்டும்.

கிழக்கு ஆளுநருக்கு இம்ரான் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Trincomalee Distric Member Of Parliament Imarn

ஆனால் கிழக்கு மாகாண ஆளுநர் இதில் ஒரு குழுவினரின் கருத்தைக் கேட்டே இந்த மீன்பிடி தடை தீர்மானத்திற்கு வந்துள்ளார். இது குறித்து அவரை நேரில் சந்தித்து விடயத்தை தெளிவு படுத்த  பல தடவை முயற்சித்த போதும் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தைப் பொருத்தவரை மீன் நுகர்வில் 50 வீதத்துக்கு அதிகமானவை சுருக்கு வலை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. சாதாரண மீனவக் குடும்பங்கள் இந்தத் தொழிலேயே தங்கியுள்ளன.

எனவே இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டு அறிந்து பூரண தகவல்களை பெற்ற பின்னர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நியாயமானதாக இருக்கும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் புதிய சர்ச்சை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் புதிய சர்ச்சை

ஆளுநரின் இந்த நடவடிக்கை இம்மீனவக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து ஆளுநர் மீள் பரிசீலனை செய்து உடன் நியாயமான தீர்மானத்திற்கு வர வேண்டும். இன்றேல் எதிர்காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு ஒன்றை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

பொய்யான முறைப்பாடு: பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொய்யான முறைப்பாடு: பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US