திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.
கலந்து கொண்டோர்
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன, உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள், மாகாண பிரதம செயலாளர், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்தகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியமை மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் மதிப்பீட்டு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
வீதி உட்கட்டமைப்பு வசதிகளினை திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
