திருகோணமலையில் தன்னார்வ தொண்டர் நிறுவன 17 ஊழியர்கள் படுகொலை நினைவேந்தல்
மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (04) 19 வருடங்கள் கடக்கின்றன.
இதனை நினைவுபடுத்தும் முகமாக நினைவு தினம் திருகோணமலையில் இடம்பெற்றது.
இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
19 வருடங்கள்
இங்கு கருத்து தெரிவித்த ராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன், இலங்கை இரானுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் இவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் நீதி இன்றி ஏமாற்றப்பட்டு 19 வருடங்களை கடந்துள்ளன.
ஏமாற்றபடுப் பட்டியலில் தான் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார். பிரான்ஸ் நாட்டை தலைமையக கொண்டு இயங்கிய குறித்த தன்னார்வ நிறுவனமான ACF பணியாற்றிய 17 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
