திருகோணமலை- கொழும்பு இரவு நேர தொடருந்து சேவை ஆரம்பம்
மிக நீண்ட நாட்களாக தடைப்பட்ட கொழும்பு- திருகோணமலைக்கான இரவு நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொடருந்தானது இன்று (20.1.2026) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.
கடந்த ஓரிரு மாத காலமாக தடைப்பட்ட இரவு நேர குறித்த சேவையானது தற்போது ஆரம்பமானதால் போக்குவரத்து சேவை பொது மக்களுக்காக இலகுபடுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
அரச அதிகாரிகள் கொழும்பு நோக்கி தங்கள் கடமை நிமித்தம் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு அதிகமாக இரவு நேர சேவையில் ஈடுபடுகின்றனர்.

இது போன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறித்த தொடருந்து சேவை ஊடாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல தொடருந்து கடவைகளில் இரவில் வீதி மின் விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.
கோரிக்கை
இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்கு பல முறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை பராமுகமாக இருக்கின்றதை அறிய முடிகிறது.

எனவே இரவு நேர தொடருந்து சேவை மிக நீண்ட நாட்களின் பின் ஆரம்பமானதை போன்று இரவு நேரங்களில் தொடருந்து கடவைக்கான வீதி மின் விளக்குகளையும் தாமதமின்றி பொருத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan