ஜனாதிபதி அநுரவுக்கும் அடிபணியமாட்டோம்! கஸ்ஸப தேரரின் மிரட்டல்
இந்தியாவின் பலாத்காரங்கள் ஜனாதிபதி அநுர ஊடாக வந்தாலும் நாம் பயம் கொள்ளப் போவதில்லை. பயங்கர யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02.2026) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே இதனை அறிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றி அவர்,
அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
சிங்கள பௌத்த விரோத அரசு
ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என.
ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர்.சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.

டில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிப் கொடுக்க வில்லை.
ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் போட் சிட்டி ஒன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார்.

அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri