தாய்ப்பால் புரையேறி 25 நாள் குழந்தை உயிரிழப்பு
திருகோணமலை - தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தூங்குவதற்காகப் போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையைப் பார்த்த போது குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியிலிருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைக்குழந்தையின் சடலத்தைத் திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி பார்வையிட்ட நிலையில் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை இச் சடலம் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம்
குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri