திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டா வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (02) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பகுதிக்கு நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan