டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 22 பேர் பரிதாபமாக பலி
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில் குறைந்தது 22 பகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி இரங்கல்
50 பேருடன் டிராக்டர் உன்னாவோவில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கான்பூரில் உள்ள கட்டம்பூர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்த இழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Distressed by the tractor-trolley mishap in Kanpur. My thoughts are with all those who have lost their near and dear ones. Prayers with the injured. The local administration is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 1, 2022
மீட்புப் பணிகள் தீவிரம்
முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் ராகேஷ் சச்சன் மற்றும் அஜித் பால் ஆகியோரை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே, டிராக்டர் வண்டியை போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாய பணிகளுக்கும், சரக்குகளை மாற்றுவதற்கும் டிராக்டர் வண்டியை பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீட்புப் பணிகளை முதல்வர் நேரில் கண்காணித்து வருவதாக லக்னோவில் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.