கன்னியா விபத்தில் ஒருவர் மரணம்! மற்றுமொருவர் படுகாயம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் திருகோணமலை - அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாகவும், 33 வயது உடையவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வெளியான தகவல்
கன்னியா பகுதியில் இருந்து திருக்கோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து போக்குடன் (மதகுடன்) மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருவண்ணாமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம் News Lankasri