திருகோணமலை மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல்
துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம் என மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி தகவலை முன்வைத்துள்ளார்.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திர தலைமையில் இடம்பெற்றது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் வன இலாகாவினால் தடை செய்யப்பட்டுள்ள குளங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாஸன் கோரிக்கை வைத்த போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மேற்படி துறைமுக அதிகார சபை 5200 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகளை மிக நீண்ட காலமாக வைத்திருக்கிறது. அதனை உடன் விடுவிக்க வேணடும் என ச.குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அரசியல் விவாதங்களை நாம் செய்வதற்கு நாடாளுமன்றம் இருக்கின்றது. எனவே இந்தக் கூட்டம் அபிவிருத்தி செய்வதற்கான மக்களினுடைய நலன்சார் விடயங்கள் இங்கு பேசப்பட வேண்டும்.
இந்தநிலையில் மக்களுடைய நலன்களை கூட்டாக பேசி, நாங்கள் மக்களுக்காக பணியாற்ற முன்வந்திருக்கின்றோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




