இரவிரவாக இணைய வழியில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் அவசரமாக நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 13 மில்லியன் ரூபாவுக்கான ஒதுக்கீடு மற்றும் கிராஞ்சி வீதி அமைப்புக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் இரவோடு இரவாக இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி 9.30 மணிக்கு நிறைவுற்ற இணைய வழி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலகத்தினர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைச் செயலாளர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இணைக்கப்பட்டிருந்தனர்.
இருந்தபோதும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ கூட்டத்தில் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
