திருகோணமலையில் காணாமல் போன மூவரில் ஒருவர் வைத்தியசாலையில்
திருகோணமலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டி சாரதி நேற்று(26) முதல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நொச்சிக்குளம் பகுதியில் அவர் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் என்ற முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
காயங்களுடன் கண்டுபிடிப்பு...
இதனையடுத்து, அவருடைய குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, நொச்சிக்குளம் பகுதியில் அவர் மயக்கமடைந்த நிலையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், சாரதி கண்டெக்கப்பட்ட இடத்தில் அவருடைய முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது வாகன விபத்தா அல்லது வேறு ஏதும் அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.