முறைசாரா புலம்பெயர்வு தொடர்பான கலந்துரையாடல்
சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது நேற்று(29.04.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
முறைசாரா புலம்பெயர்வு
முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இலங்கையில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழில் கல்வித் தகைமைக்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என இதன்போது சோனியா டக்ளஸ் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஆலோசகர் சுமித்ரா சதாசிவம், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.இளங்கீரன் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




