திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
தங்களுக்கு அரச நியமனங்களை வழங்குமாறு திருகோணமலை (Trincomalee) வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியா (Kinniya) பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று (09.07.2024) கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எங்களது வேலையில்லா பிரச்சினையை ஜனாதிபதி செவிமடுக்க வேண்டும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்காக ஊர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடி உள்ளோம்.
வேலைவாய்ப்புக்கள்
இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது பிரச்சினையை சரியான முறையில் தீர்க்காவிடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம்.

900இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும் ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள். எங்களுக்கு 35 வயது கழிந்து விட்டது. எனவே, சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வது மிகவும் கடினமாகும். உள்வாரி வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி எங்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும், பெண்ணுரிமை பெண் சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பு சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்க பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது. உரிய வயதில் உரிய வேலை வாய்ப்புக்களை தந்து உதவுங்கள்” வலியுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan