திருகோணமலை நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் சத்திரியப்பிரமாண நிகழ்வு!
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வும், கடமை ஆரம்பிக்கும் நிகழ்வும், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வில் மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிபதி சமிலா குமாரி ரத்னாயக்க மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் ஆகியோர் உட்பட நீதிமன்ற பதிவாளர்கள், பொலிஸார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது விசேடமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும், நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டியது எப்படி என்பது பற்றியும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட வைத்தியர் வீ.கௌரீஸ்வரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை அரச ஊழியர்கள் மக்களுக்கு சிறந்த சேவையைச் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தேசியக்கொடியை மேல் நீதிமன்ற நீதிபதி ஏற்றியதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.







போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam