திருகோணமலை உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் அதிரடியாக கைது
திருகோணமலை உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குவதற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நபர் ஒருவரிடமிருந்து 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் (ரூ.1,235,000) இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர், சிறைச்சாலை காவலர் ஒருவரின் ஊடாக குறித்த தொகையை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதே, இன்று (06.10.2026) மாலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் சிறைச்சாலை காவலர் ஒருவரும் தொடர்புபட்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.