ஆளும் கட்சி எம்.பியை தாக்க முயற்சித்த ஐ.மக்கள் சக்தி எம்.பி - இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி (VIDEO)
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, அமளியான நிலைமை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி மீது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததால் இந்த பதற்றம் ஏற்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சபைக்கு நடுவில் வந்து, திஸ்ஸ குட்டி ஆராச்சியை தாக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை தடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியமை தொடர்பில் சபாநாயகர் அவரை எச்சரித்திருந்தார்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri