தீக்குளிக்க முயற்சித்த திருச்சி முகாம் ஈழத் தமிழர்(Photo)
இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் இன்று(24) தீக்குளித்து சாக முயற்சி செய்துள்ளார்.
தவறான முடிவு
உமாரமணன் என்ற ஈழத் தமிழரே இவ்வாறு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது அயலவர்களின் முதலுதவி மூலம் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த ஈழத் தமிழர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
திருச்சி சிறப்பு முகாம்
கடந்த 20/05/2022 தொடக்கம் உணவேதும் உட்கொள்ளாது ஈழத்தமிழ் அகதிகள் பதினேழுபேர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடல் நிலை மோசமடைந்து விடும் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதும் அவர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்ட பல ஈழத்தமிழ் உறவுகளை விடுவிப்பதற்காக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர்களின் உறவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.