கொழும்பு மாநகர சபையின் பட்ஜெட்! எதிரணியினருக்கு ஏற்பட்ட சிக்கல்..
கொழும்பு மாநகரசபையில் தொடர்ந்தும் குப்பைக்காகவே பல ஊழல்கள் நடந்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு இருந்தாலும் கொழும்பு மாநகரசபையை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆதரவு குறைவாகதான் இருந்தது. கொழும்பு மாநகரபை என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கொழும்பு முழுவதிலும் வெற்றிப்பெற்ற போதும் கூட கொழும்பு மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சியினதும் அதிலிருந்து மாற்றம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்ததது.
நாடாளுமன்றத்திற்கு பின்னர் அத்தனை உள்ளுராட்சி மன்றங்களையும் விட அதிக வரவு- செலவு வரக்கூடிய இடம் கொழும்பு மாநகரசபையாகும் என குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு...