புதிய தாயும் மூன்று மாதக்குழந்தையும் பலி! இரண்டு மாதங்களாக சூரியனை காணாத சிறுவர்கள்!(Video)
உக்ரைனின் தெற்கு நகரமான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு தாயும் அவரது மூன்று மாத குழந்தையும் உள்ளடங்குவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
Valeria was a new mother, her baby daughter Kira was just three month old. Russia took away their lives today when its rocket hit a residential building in Odesa.
— Myroslava Petsa (@myroslavapetsa) April 23, 2022
Valeria’s husband and Kira’s father Yuri posted these pictures of them. pic.twitter.com/pendbL6bi2
இதேவேளை மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தங்கியுள்ள சிறுவர்களின் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களால் இந்த சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்களும் குறித்த இரும்பு தொழிற்சாலையில் தங்கியுள்ளனர்
எனினும் இந்த தொழிற்சாலையில் தங்கியிருக்கும் உக்ரைன் படைவீரர்களை காரணம் காட்டி, தொழிற்சாலையின் வெளியில் இருக்கும் ரஸ்ய படையினர், அவர்களை வெளியேற அனுமதி மறுத்து வருகின்றனர்
இந்தநிலையில் தாம் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றும் சூரிய வெளி;ச்சத்தை பார்க்கவேண்டும் என்றும் அங்கு தங்கியிருக்கும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Inside the Azovstal steel plant in #Mariupol, where more than 1,000 civilians (children, women, elderly) were hiding in the basement for almost two months.
— Asami Terajima (@AsamiTerajima) April 23, 2022
Children are playing and keeping each other company but they are saying they want to go home, go outside in the sun ? pic.twitter.com/W108b6nNZY
முன்னதாக இந்த தொழிற்சாலையில் காயப்பட்டவர்கள் தங்கியிருப்பதாகவும் சிலர் இறந்துவிட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் படையினர் சர்வதேச ஊடங்களுக்கு தெரிவித்திருந்தனர்.