“தவறிழைக்கும் பெரியவர்களால், மரணத்தை தழுவும் தவறிழைக்காத சிறுவர்கள்” (VIDEO)
சிறுவர்களின் எதிர்காலத்துக்காக பெரியர்களின் காத்திரமான பங்கு, அனைத்து மட்டங்களிலும் உணரப்படுகிறது.
எனினும் பெரியவர்களின் தவறுகளால் சிறுவர்கள் மரணமாகும் சம்பவங்கள் கடந்த மாதத்தில் பதிவாகி வருகின்றன.
அமரிக்கா, இங்கிலாந்து அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த சம்பவங்கள் கடந்த ஒரு மாதக்காலத்துக்குள் நிகழ்ந்துள்ளன.
அமரிக்காவின் மிச்சிக்கன் மாநில பாடசாலை ஒன்றில் 2021 டிசம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் கொல்லபட்டனர்
இந்த சம்பவத்தின்போது சிறுவன் ஒருவரே தமது தந்தையின் துப்பாக்கியை பாடசாலைக்கு எடுத்து வந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக கண்டறியப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் டிசம்பர் 16ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தொன்றில் 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்தபோது அதில் இருந்த சிறுவர்கள் தரையில் விழுந்து மரணமாகினர்.
இங்கிலாந்தின் தெற்கு லண்டன், சுட்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் டிசம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கும் பெற்றோரின் கவனயீனமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் தமிழகம், திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 17ஆம் திகதி பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பாடசாலையொன்றின் கழிப்பறை சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவங்கள் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டவை. எனினும் எத்தனை சிறுவர்கள் பல்வேறு இடங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்தாத வகையில் நாளாந்தம் பெரியவர்களின் தவறுகளால் பலியாகி வருகின்றனர்.
இந்தநிலையில் இவவாறான சம்பவங்கள் பெரியவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன





திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
