தமிழர் பகுதிகளில் விஜயகாந்திற்கு அஞ்சலி (Photos)
இந்தியாவில் உயிரிழந்த முன்னாள் நடிகர் மற்றும் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த்க்கு மட்டக்களப்பு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
காந்தி பூங்காவில் இன்று (29.12.2023) மாலை ஒன்று திரண்ட மக்கள் மலர் தூபி தங்களது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
கோவிட் தொற்று ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவரது இழப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! கேப்டன் பிரபாகரன் தந்த மாபெரும் வெற்றி - சீமான்
வவுனியாவில் அஞ்சலி
விஜயகாந்துக்கு பல்வேறு தரப்புக்களும் அனுதாபம் செலுத்திவரும் நிலையில், வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, அவரது திருவுருவ படத்திற்கு மெழுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுள்ளதுடன் அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திலீபன்
முல்லைத்தீவில் அஞ்சலி
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு ஈழத்தின் வன்னியில் 'முல்லைத்தீவு வள்ளுவர்புரம் படைப்பாளர் இணைவகம்' ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வானது இன்று 29.12.2023 விசுவமடு றெட்பானா சந்தியில் இடம்பெற்றது.
சமாதான நீதவானும் ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி ஜெசிந்தா இரவீந்திரன் நினைவு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
இதன்போது அகவணக்கம், நினைவுச்சுடர் ஏற்றல், மலர் வணக்கம் என்பன இடம்பெற்றன.
செய்தி- கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
