முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! - துரைராசா ரவிகரன் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, வடகிழக்கு தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
குறிப்பாக தாயகத்தில் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுவந்தன.
எனினும், இவ்வாண்டு கோவிட் தொற்று அசாதாரண நிலை காரணமாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
அந்தவகையில் தமிழ் அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன இம்முறை நினைவேந்தலை வீட்டுமுற்றங்களில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தன.
அதற்கமைய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு இறுதி போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.



கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri