அக்கரபத்தனையில் இறந்த தொழிலாளர்களை நினைவுகூர்ந்து தோட்ட நிர்வாகம் அஞ்சலி
அக்கரபத்தனை தனியார் தோட்டம் ஒன்றில் நீண்ட காலமாக தேயிலை தோட்டத்தில் சேவையாற்றி தோட்டத்தில் உயிர்நீத்த தோட்டத்தொழிலாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
குறித்த தோட்டத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் வாழ்ந்து வருகின்றன நிலையில் இதில் அநேகமானவர் தோட்டத்தில் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வானது நிர்வாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைவாக தோட்ட முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
தோட்ட அதிகாரிகள்
நிகழ்வில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் மேற்பார்வை செய்யும் கங்காணிமார்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு்ளளன.
மேலும், நிகழ்வில் தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.