விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos)

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Theepan Sep 22, 2022 11:02 PM GMT
Report

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(22.09.2022) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

நினைவஞ்சலி நிகழ்வு

1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர். அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing

அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கத்தின் கருத்து

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing

இதேவேளை நாகர்கோவில் பாடசாலை அருகாமையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் எம்.கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது எம்.கே சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்.

மீண்டும் இனப்படுகொலைகள் இடம்பெறாதிருக்கக்கூடிய பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள்

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை பாவித்து, தமிழ்தேசிய இனம் தமது சுய நிர்ணய உரிமையைப் பாவிக்கக் கூடியதாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமா? சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing

நாகர்கோவில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களுக்குமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.      

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US