மட்டக்களப்பில் மாமனிதர் சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி!
மறைந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும், யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவாஜிலிங்கத்திற்கு மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பொது நூலக மண்டபத்தில் இன்று (17.111.2026) ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மலரஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சு. சுதாகரன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் ச. சர்வானந்தன், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுதாகரன், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயத்தின் உப தலைவர் சோமசுந்தரம், மற்றும் பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள், சனசமூக நிலைய நிர்வாகத்தினர், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

