சமூக வலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்குரிய கருத்து! ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜனாதிபதியின் உத்தரவு
இந்நிலையில் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாக்குமூலம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகள் மத மோதல்களை உருவாக்கி நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால் குறித்த விடயத்தை விசாரித்து அவரிடம் அறிக்கை அளிக்க கோரப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இதேவேளை குறித்த காணொளியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வெளியிட்ட கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன நேற்று (15.05.2023) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மதப்போராட்டம் ஏற்படுவதற்கு முன்னர் இந்த போதகரை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்த இவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam