யாழிலிருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரை ஆரம்பம்
பாசத்திற்கான யாத்திரை எனும் தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் தலைமையில் யாத்திரை ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்த யாத்திரை யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (19.04.2023) ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாத யாத்திரையை முன்னின்று நடத்தும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினரும் யாத்திரையில் இணைந்துகொண்டுள்ளனர்.
புரட்சிகரமான மாற்றம்
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
புரட்சிகரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக தேசிய இயக்கம் இன்று யாழில் இருந்து பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த பாதயாத்திரை எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடையவுள்ளது.
இளைஞர்களால் அடிப்படை மாற்றம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பாத யாத்திரை ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 21 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri