நுவரெலியாவில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து விபத்து
நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (05.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றினை சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்த வேலையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் குறித்த விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த மரத்தினை வெட்டியது யார் என்று தெரியாத நிலையில் சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விபத்தினால் அப்பகுதியின் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri