ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததால், இன்று (21) அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலையக பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ரொசெல்ல பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மழை
வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மரம் வெட்டப்பட்ட பின்னர், வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, ஹட்டன்-கொழும்பு மற்றும் ஹட்டன்-கண்டியின் பிரதான வீதிகள் மற்றும் ஏனைய சிறு வீதிகளிலும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அந்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனம் ஓட்டுமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வாகன சாரதிகளை கேட்டுக்கொள்கிறது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan