வீதியால் பயணித்த தாய், தந்தை, மகளுக்கு நேர்ந்த கதி
பொலநறுவையில் சம்பவித்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரலகங்வில - தெஹியத்தகண்டிய வீதியில் அலுதோயா பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்று
காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் பெய்த பலத்த காற்று மற்றும் கனமழையால் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதேவேளை, இன்று இரவும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிலைபெற்று வருகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் வாரத்தில் மழை மற்றும் காற்று நிலைமைகளில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
