நிலவும் சீரற்ற காலநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19.01.2025) திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குற்பட்ட உப்புவெளி பகுதியில் வீதி அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வீதிப் போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்திற்கு தடைப்பட்டிருந்தது.
உரிய நடவடிக்கை
இதனை தொடர்ந்து, திருகோணமலை நகராட்சிமன்ற விசேட பணிக்குழு (Revenu Development and Disaster - Task force) உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் நகராட்சிமன்ற தீயணைப்பு பிரிவினர், நகராட்சிமன்ற ஊழியர்கள், உடனடியாக செயற்பட்டு குறித்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மழை மற்றும் பலத்த காற்று
யாழ்ப்பாணத்தில் பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/68 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேரும், ஜே/69 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 49 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.
செய்தி - கஜிந்தன், தீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
பிரதான குளங்கள் நிரம்பியுள்ளதன் காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சைக்குளம் நிரம்பிய நிலையில் இரண்டு இஞ்சி நீர் வான்பாயும் நிலையில் குளத்தின் மூன்று வான் கதவுகளும் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது.இதேபோன்று ரூகம் குளம் ஏழு இஞ்சிகள் வான்பாயும் நிலையில் இரண்டு வான்கதவுகள் 07அடிகள் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நவகிரி குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.இதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிiயேற்பட்டுள்ளது.
தற்போது நெற்செய்கை அறுவடை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மழைபெய்துவருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
