பதவி விலகிய அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெறுமாறு உத்தரவு
பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பிலான சுற்று நிரூபம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் அரசாங்க அமைச்சர்கள் 26 பேர் பதவி விலகியுள்ளனர்.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல பதவி விலகுவதற்கு முன்னதாக இந்த சுற்று நிரூபத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
சுற்று நிரூபத்தின் பிரகாரம் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சு பிரதானிகளும், பிரதேசபை செயலாளர்களும் மேற்குறிப்பிட்ட சுற்று நிரூபத்தின் பணிப்புரைகளுக்கு அமைய செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 26 அமைச்சர்கள் பதவி விலகி ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் அமைச்சர்களின் கீழ் காணப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை இதுவரையில் ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
