திறைசேரி நிதி மோசடி விவகாரம்: நிதி அமைச்சு விசேட அறிவிப்பு
இலங்கையின் வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானது தொடர்பில் நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், வெளித் தரப்பினருக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, நிதி அமைச்சக செயலாளர் இன்று (30) குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகள்
இருப்பினும், தம்மால் இன்றைய குழு அமர்வில் கலந்துகொள்ள இயலாது என சூரியப்பெரும தலைவருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்தி வரும் விசாரணைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என வழக்கறிஞர்கள் அமைப்பின் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.