திறைசேரி நிதி மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி கோரியுள்ள நாடாளுமன்ற விவாதத்தை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
திறைசேரி நிதி மோசடி தொடர்பாக உடனடி விவாதம் நடத்தக் கோரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, இந்த விவாதம் நாடாளுமன்றில் இன்று(5.5.2026) பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
இலங்கையின் வெளிநாட்டு கடன் தவணைக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமானது தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நிதி மோசடி தொடர்பாக, பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ச கடந்த ஏப்ரல் 30 ஆம் திகிஅன்று தனது வீட்டுத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
