2.5 மில்லியன் டொலர் மாயம் : பகிரங்கமாக கேள்வியெழுப்பிய சஜித் - அரசு தரப்பு விளக்கம்
சமீபத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை திறைசேரி நிதி திசைதிருப்பல் சம்பவத்தை, இலங்கையின் கடன் வழங்குநர்கள் ஒரு தொழில்நுட்பக் கடன் தவறுதலாக வகைப்படுத்த வாய்ப்பில்லை என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் அளித்த ஆலோசனையையும் அவர் மேற்கோள் காட்டி பதிலளித்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பில் இன்று(05.05.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
13 ஆண்டுகளின் பின் மீண்டும் அதே அரசியல் பாதை - டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்... தமிழ்நாட்டில் விஜய்
2.5 மில்லியன் மோசடிக்கு அரச தரப்பு விளக்கம்
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பெர்னாண்டோ,
சமீபத்திய மோசடி சம்பவத்தில், இலங்கை அரசாங்கம் தனது கடன் கடமைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாகவோ அல்லது மறுத்ததாகவோ கருதப்படாமல், ஒரு இணையக் குற்றச் செயலாகவே கருதப்படுகிறது.

இலங்கையால் அனுப்பப்பட்ட நிதிகள் ஆஸ்திரேலியக் கடன் வழங்குநரால் பெறப்படவில்லை என்றாலும், இது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கத்தின் இயலாமையையோ அல்லது தயக்கத்தையோ குறிக்கவில்லை.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் மற்றும் இது ஒரு இணையக் குற்றச் சம்பவம் என்பதால், ஆஸ்திரேலியாவும் பாரிஸ் கிளப் உறுப்பினர்களும் இதனை ஒரு கடன் தவறுதலாகக் கருத வாய்ப்பில்லை என்று ஆலோசகர்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு தொழில்நுட்பக் கடன்தவறாக வகைப்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க, கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோசடி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றில் தகுந்த ஆதாரங்களுடன் சமர்பிக்கப்படும்..
நாடாளுமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்ட காலவரிசையின்படி, 2026 ஜனவரி 9 அன்று இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழுவிற்கு (CERT) இந்த விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
அதே நாளில் குற்றப் புலனாய்வுத் துறைக்கும் (CID) நகல் அனுப்பப்பட்டது. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட கடன் வழங்குநரான ஆஸ்திரேலியா எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், மார்ச் 23 அன்று நிதி வந்து சேரவில்லை என இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
மோசடி நடந்து மறுநாள், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குற்றப் புலனாய்வுத் துறையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார், அதே நேரத்தில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு (FIU) ஏப்ரல் 1 அன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் இருந்து தகவல்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம். ஏனெனின், நாடாளுமன்றத்திற்கு உண்மைகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, மோசடியுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் குறித்து விசாரணைகள் மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை காத்திருக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அனைத்து கண்டுபிடிப்புகளும் இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.