புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் அறுவர் கைது
புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (14.12.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஆண் சந்தேகநபர்கள் நால்வரும் இரு பெண் சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.
விசாரணை
சந்தேகநபர்கள் 35 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பெண் சந்தேகநபர்கள் 36 மற்றும் 45 வயதுடைய மடாட்டுகம மற்றும் தேவிபுரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam