நாளை முதல் நாடு முழுவதும் அதிகரிக்கப்போகும் மழை.. வெளியான தகவல்
2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப்பகுதிகளின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.