தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை விதிப்பு
தென்கொரியாவின் (South Korea) ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக், கடந்த வாரம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்திருந்தார்.
இராணுவச் சட்டம்
எனவே, இது தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 03ஆம் திகதி இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார்.
அதன்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த இராணுவ சட்ட நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவருக்கு வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |