வவுனியாவை வந்தடைந்த தமிழர் போராட்டம்! - நாளை காலை மன்னார் நோக்கி பயணம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, கோவிட் - 19 தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 09.00 மணிக்குத் திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி, கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது.
அங்கிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு 7 மணியளவில் நெடுங்கேணியை அடைந்து, அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்த நிலையில் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
நாளையதினம் காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கடைவீதி ஊடாக நகரப் பள்ளிவாசல் வரை சென்று அங்கிருந்து ஹொரவ்பொதானை வீதி வழியாக மன்னார் வீதிக்குச்சென்று அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்
















சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
