வடக்கு - கிழக்கு மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையேந்தக் கூடாது - செல்வம் அடைக்கலநாதன்

Tamil National Alliance travel restrictions Selvam Adaikalanathan Dry food packs
By Ashik Jun 20, 2021 11:24 AM GMT
Report

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 05 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் டெலோ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானியாவில் வாழ்கின்ற நண்பர் யோகன் விஸ்வநாதனினால் வன்னி மாவட்டத்தில் 05 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மன்னாரில் உள்ள டெலோ அலுவலகத்தில் இடம் பெற்றது.

கோவிட் தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், உலர் உணவு பொருட்களை வழங்குவதாகவும் கூறி ஏமாற்றுகின்ற நிலையில் வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையேந்தக் கூடாது என்பதற்காக புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அதே போல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) சார்பாக பிரித்தானியாவில் வாழ்கின்ற நண்பர் யோகன் விஸ்வநாதனிடம் கோரிக்கை விடுத்த நிலையில் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஆரம்ப பணிகளை ஆரம்பித்துள்ளோம் அவருக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும் பாரிய நிதி உதவியை வழங்கி ஏழை மக்களினுடைய பசியை போக்க ஒரு தர்மத்தை செய்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாகவும் வன்னி மாவட்ட மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எமது மக்கள் அரசிடம் கையேந்தும் நிலையை மாற்ற புலம் பெயர்ந்த உறவுகள் எம் மக்களுக்கு கை கொடுக்க வேண்டும். நாட்டில் பயணத்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமுர்த்தி பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கும் 05 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்திருந்தனர் ஆனால் சமமுர்த்தி பெற்றுக்கொள்ளுகின்றவர்களுக்கு மாத்திரமே குறித்த 05 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.

அந்த வகையில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றியுள்ளது அன்றாட கூலித் தொழிலை மேற்கொள்ளுகின்றவர்களின் குடும்பங்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையிலே அனைத்துக் கட்சிகளும் இணைந்து புலம் பெயர் மக்களின் உதவிகளுடன் நிவாரண உதவியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் அரசாங்கம் தவறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். 

GalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US